தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு மையம்
வடசென்னையில் உள்ள திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலின் வெளிப்புறத்தில் உள்ள வடக்கு மாட வீதியில் காணப்படும் நடுகற்கள் பற்றி தகவல் அறிந்து தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவர் கு. நாகபூஷணம், பொருளாளர் செல்வி ந. சிவலட்சுமி மற்றும் அறங்காவலர் திருமதி சு. சுபாஷிணி ஆகியோர் 18.09.2022 அன்று அவற்றைக் கண்டு கள ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சோழர் காலத்து கோயிலான அகத்தீஸ்வரர் கோயிலில் கருவறைக்கு வெளிப்புறத்தில் இரு புறத்திலும் காணப்படும் கலப்பைச் சின்னத்தை பார்வையிட தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு மையத்தின் செயலாளர் ர. லாவண்யா மற்றும் பொருளாளர் செல்வி ந. சிவலட்சுமி ஆகியோர் மாணவர்களுடன் இணைந்து 20.12.2024 அன்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
08.02.2025 அன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகிலுள்ள ஆவூர் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு பொன்னியம்மன் கோயில் அருகில் ஐந்து நடுகற்கள் கண்டறியப்பட்டன.
இந்த நடுகற்கள் படிமங்கள் மற்றும் சிற்பங்களைக் கொண்டவை. தலைவன் அல்லது மன்னன் போரில் வெற்றி பெற வேண்டி அல்லது நோயிலிருந்து மீள வேண்டி தேவியிடம் வேண்டி போரில் வெற்றி பெற்ற பிறகு தன் தலையை தானே அறுத்து உயிர் விடுதல் ‘அரிகண்டம் நடுகல்’ எனப்படும்.
இந்த நடுகற்கள் சுமார் 17ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகின்றன என்று தொல்லியல் துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கவுரைப்பேட்டை அருகிலுள்ள அரியதுரையில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ வரமூர்த்தீஸ்வரர் மரகதவல்லி சிவன் கோயில் உள்ளது. ‘அரியதுரை’ என்ற பெயரில் ‘அரிய’ என்பது ‘அபூர்வம்’ என்பதையும் ‘துரை’ என்பது ‘நதிக்கரையில் உள்ள இடம்’ என்பதையும் குறிக்கிறது.
இந்த கோயிலை பார்வையிட தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு மையத்தின் செயலாளர் ர. லாவண்யா மற்றும் பொருளாளர் செல்வி ந. சிவலட்சுமி ஆகியோர் மாணவர்களுடன் இணைந்து 20.12.2025 அன்று கள ஆய்வு மேற்கொண்டனர்.