Call to Donate
Logo SIHCRC

மரபுநடை (Heritage Walk)

தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு மையம்

கைலாசநாதர் கோயில் – காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் தென்னிந்தியாவின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இந்தக் கோயிலின் வரலாற்று சிறப்புகளை மாணவர்களுக்கும் வரலாற்று ஆர்வலர்களுக்கும் அறிமுகப்படுத்தும் நோக்கில் 06.03.2022 அன்று மரபுநடை பயணம் நடத்தப்பட்டது.

மாமண்டூர் குடைவரைக் கோயில்

பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட மாமண்டூர் குடைவரைக் கோயில்களின் வரலாற்று மற்றும் கலைச்சிறப்புகளை அறிமுகப்படுத்தும் வகையில் 10.05.2022 அன்று மாணவர்களுடன் மரபுநடை பயணம் நடத்தப்பட்டது.

நடவாவி – காஞ்சிபுரம்

மாமண்டூர் பயணத்திற்குப் பிறகு காஞ்சிபுரம் அருகிலுள்ள நடவாவி கிணற்றின் அமைப்பு மற்றும் அதன் கலை அம்சங்கள் பற்றி விளக்கங்கள் வழங்கப்பட்டன.

சந்திரகிரி கோட்டை – ஆந்திர மாநிலம்

04.12.2022 அன்று சந்திரகிரி கோட்டைக்கு மரபுநடை பயணம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் பங்கேற்று அதன் வரலாற்று சிறப்புகளை அறிந்துகொண்டனர்.

மாமல்லபுரம்

11.02.2023 அன்று மாமல்லபுரத்திற்கு மரபுநடை பயணம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் பங்கேற்று வரலாறு மற்றும் கலைச்சிறப்புகள் குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டன.

உத்திரமேரூர்

27.04.2024 அன்று உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்கள் மற்றும் கல்வெட்டுகளை பார்வையிடும் மரபுநடை பயணம் நடத்தப்பட்டது.