Call to Donate
Logo SIHCRC

INTERNSHIP PROGRAM

தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு மையம்

28.05.2024 – 29.05.2024 Internship Program

உலகநாத நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொன்னேரி வரலாற்றுத்துறையில் படிக்கும் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இரண்டு நாள் Internship Program தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு மையத்தின் சார்பாக நடத்தப்பட்டது.

நாள் – 1

முதல் நாள் நிகழ்வில் தொல்லியலாளர் முனைவர் கோ. சசிகலா, மாநில சுவடிக் குழும ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அவர்கள் “கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி” என்ற தலைப்பில் மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினார்.

நாள் – 2

இரண்டாம் நாள் கள ஆய்விற்காக மாணவர்கள் திருப்பாலைவனம் திருப்பாச்வரர் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அக்கோயிலில் உள்ள பழங்கால கல்வெட்டுகள், ஓவியங்கள், சிற்பங்களை மாணவர்கள் ஆர்வத்துடன் ஆய்வு செய்தனர். இரண்டு நாள் பயிற்சியின் முடிவில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

20.11.2025 – 21.11.2025 Internship Program

உலகநாத நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொன்னேரி வரலாற்றுத்துறையில் படிக்கும் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இரண்டு நாள் Internship Program நடத்தப்பட்டது.

நாள் – 1

முதல் நாள் நிகழ்வில் தொல்லியலாளர் முனைவர் கோ. சசிகலா அவர்கள் திருவொற்றியூர் வடிவுடைய அம்மன் உடனுறை தியாகராஜசுவாமி திருக்கோயிலின் வரலாறு, கல்வெட்டு மரபுகள், கட்டிடக்கலைச் சிறப்புகள் பற்றி விரிவாக விளக்கினார். இது மாணவர்களுக்கு வரலாற்று ஆய்வின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.

நாள் – 2

இரண்டாம் நாள் நிகழ்வில் முனைவர் பேராசிரியர் சி. இளங்கோ, உதவி பேராசிரியர், தமிழ்த்துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை அவர்கள் வரலாறு மற்றும் இலக்கியங்களுக்கிடையேயான தொடர்பைப் பற்றி விளக்கினார். இந்த நிகழ்வு மாணவர்களுக்கு இலக்கிய ஆதாரங்களை ஆய்வில் பயன்படுத்தும் முறைகளை அறிமுகப்படுத்தியது.